| 
         
          | 3256. | மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத் |   
          |  | தேனி 
            டங்கொளுந் கொன்றையந் தாரினார் கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
 ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே.         2
 |  
            2. 
        பொ-ரை: மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட சிவந்த சடைமுடியின்மீது, தேன் துளிக்கும் கொன்றை
 மாலையை அணிந்தவர். நறுமணம் திகழும் குளிர்ந்த
 வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் இந்த
 உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர்.
      கு-ரை: 
        வரம்புகளில் மலர்ந்த தாமரை முதலிய மலர்களின் மணம் பரவுவதால் கானிடம் கொளும் தண்வயல் காழி என்றார்.
 கான் - வாசனை. மானிடங்கொண்டு - மானை இடப்பக்கத்தில்
 ஏந்தி. ஊன் - உடம்பு. இடங்கொண்டு என்பது. "எந்தையே ஈசா
 உடலிடங் கொண்டாய்" என்ற திருவாசகத்திலும் காண்க.
 |