| 
         
          | 3260. | பெண்ணொர் கூறினர் பேயுட னாடுவர் |   
          |  | பண்ணு 
            மேத்திசை பாடிய வேடத்தர் கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
 அண்ண லாய வடிகள் சரிதையே.             6
 |       6. 
        பொ-ரை: சிவபெருமான் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர். பேய்க்கணங்கள் சூழ
 ஆடுபவர். உலகத்தார் போற்றும்படி நல்ல பண்களை
 ஏழிசைகளோடு பாடிய வேடத்தர், மூன்று கண்களை உடையவர்.
 இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும் தலைவரான
 சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும்.
       கு-ரை: 
        ஏத்து - உலகத்தார் போற்றத்தக்க இசையும் ஏழிசையும், பண்ணும் - உருக்(சாகித்தியம்)களையும், பாடிய
 வேடத்தார். சரிதை - இங்குப் புகழ் என்ற பொருளில் வந்தது,
 இவை அண்ணலாகிய அடிகள் புகழ்களேயாகும்.
 |