3262. |
எடுத்த வல்லரக் கன்முடி தோளிற |
|
அடர்த்து
கந்தருள் செய்தவர் காழியுட்
கொடித்த யங்குநற் கோயிலு ளின்புற
இடத்து மாதொடு தாமு மிருப்பரே. 8 |
8.
பொ-ரை: திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த
வல்லரக்கனான இராவணனின் முடியும், தோளும் நெரியுமாறு
அடர்த்து, பின் அவன் எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள்
செய்த சிவபெருமான் சீகாழியில் கொடிகள் விளங்குகின்ற அழகிய
திருக்கோயிலுள் தம் திருமேனியின் இடப்புறத்தில் உமாதேவியை
உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருந்தருளுவர்.
கு-ரை:
கொடி - பதாகைகள். தயங்கும் - விளங்குகின்ற.
இடத்து - இடப்பாகத்திலுள்ள, மாது.
|