| 
         
          | 3264. | உருவ நீத்தவர் தாமு முறுதுவர் |   
          |  | தருவ லாடையி னாருந் தகவிலர் கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
 ஒருவன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.   10
 |  
            10. 
        பொ-ரை: தமது கடுமையான சமய ஒழுக்கத்தினால் உடலின் இயற்கை நிறம் மாறிக் கருநிறமான சமணர்களும், துவர்
 நிறம் ஊட்டப்பட்ட ஆடையை உடுக்கின்ற புத்தர்களும் தகைமை
 யற்றவர்கள். உங்களுக்கு நல்ல காரியம் கைகூட வேண்டுமென்று
 விரும்பினீர்களேயானால், கடலை அடுத்த சீகாழியில் வீற்றிருந்
 தருளும் ஒப்பற்ற சிவபெருமானின் சிவந்த திருவடிகளைச்
 சரணடைந்து உய்வீர்களாக!
       கு-ரை: 
        ஒருவன் - சிவனுக்கு ஒரு பெயர். "ஒருவனென்னும் ஒருவன் காண்க". (தி.8 திருவா.-திருவண்டப்பகுதி. அடி - 43.)
 |