3267. |
வானி லங்க விளங்கு மிளம்பிறை |
|
தான லங்க
லுகந்த தலைவனார்
கானி
லங்க வருங்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே. 2 |
2.
பொ-ரை: வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச்
சந்திரனை மாலைப்போல் விரும்பி அணிந்த தலைவரான சிவ
பெருமான், கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில்
மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு
வீற்றிருந்தருளுவார்.
கு-ரை:
வான்இலங்க - வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்
பிறையை. அலங்கல் உகந்த - மாலையாக விரும்பி. (தலைவனார்)
கான் - (சோலை முதலியவற்றின்) நறுமணம். இலங்க - மிக. வரும்
- பரவி வருகின்ற. (கழிப்பாலையார்) மான் - மானின். நலம் -
அழகு. மட நோக்கு - மடப்பத்தோடு நோக்குதலையுடையவளாகிய;
அம்பிகையோடும் திருக்கழிப்பாலையுள் எழுந்தருளியுள்ளார் என்க.
தலைவனார் - எழுவாய். கழிப்பாலையர் - பயனிலை.
|