3268. |
கொடிகொ ளேற்றினர் கூற்றை யுதைத்தனர் |
|
பொடிகொண் மார்பினிற் பூண்டதொ ராமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன வார்க்கறி வொண்ணுமே. 3 |
3.
பொ-ரை: இறைவர் எருதுக் கொடியுடையவர். காலனைக்
காலால் உதைத்தவர். திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின்
ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர். நறுமணம் கமழும்
பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும்
அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும்?
ஒருவராலும் முடியாது.
கு-ரை:
கொடியின் கண் கொண்ட இடபத்தையுடையவர் -
இடபக்கொடியை உடையவர். ஆமை; ஆமையோட்டைக்
குறிப்பதால் முதலாகுபெயர். கடி - நறுமணம்.
|