| 
       
         
          | 3269. | பண்ண 
            லம்பட வண்டறை கொன்றையின் |   
          |  | தண்ண 
            லங்க லுகந்த தலைவனார் கண்ண 
            லங்கவ ருங்கழிப் பாலையுள்
 அண்ண லெங்கட வுள்ளவன் அல்லனே.
 |  
            4. 
        பொ-ரை: பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி
 அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும்
 பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும்
 அண்ணலாவார். அவரே எம் கடவுள் அல்லரே?
       கு-ரை: 
        பண் - இசையின். நலம் - இனிமை. பட - பொருந்த. வண்டு, அறை - பாடுகின்ற. (கொன்றை). அலங்கல் உகந்த - மாலை
 விரும்பிய, தலைவனார். நலம் கண்கவரும் கழிப்பாலை - எனமாற்றி,
 கண்ணைக் கவரும் பொலிவை உடைய கழிப்பாலை யென்க. நலம்
 - பொலிவு
 |