3271. |
துள்ளு மான்மறி யங்கையி லேந்தியூர் |
|
கொள்வ
னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே. 6 |
6.
பொ-ரை: துள்ளுகின்ற இளமையான மானை, அழகிய
கையில் ஏந்தி, ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்0பாலையை நினைந்து
ஏத்த வினையாவும் நீங்கும்.
கு-ரை:
இடுபலி வெண்டலையிற் கொள்வனார் எனக்கூட்டி
இடும் பிச்சையை வெண்தலை யோட்டிற் கொள்பவர் என்க.
|