| 
         
          | 3275. | செய்ய நுண்டுவ ராடையி னாரொடு |   
          |  | மெய்யின் 
            மாசு பிறக்கிய வீறிலாக் கையர் கேண்மை யெனோகழிப் பாலையெம்
 ஐயன் சேவடி யேயடைந் துய்ம்மினே.         10
 |        10. 
        பொ-ரை: சிவந்த மெல்லிய மஞ்சட் காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும், அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற
 கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ?
 திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய
 சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து
 உய்தி பெறுங்கள்.
       கு-ரை: 
        செய்ய - சிவந்த. நுண் - மெல்லிய. துவர் ஆடையினார் - காவி உடையை உடைய புத்தர் (மெய்யில்
 நீராடாமையால்) உடம்பில் அழுக்கு மிகுந்த. வீறு இலா -
 பெருமையில்லாத. கையர் - வஞ்சகராகிய சமணர். வீறு - பெருமை.
 கையர் - வஞ்சகர்.
 |