3276. |
அந்தண் காழி யருமறை ஞானசம் |
|
பந்தன்
பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுல காடன் முறைமையே. 11 |
11.
பொ-ரை: அழகிய, குளிர்ச்சி மிகுந்த சீகாழியில்
அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன், பாய்கின்ற நீர் சூழ்ந்த
திருக்கழிப்பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன
செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும்
முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர்.
கு-ரை:
அம்-அழகு. தண் - குளிர்ச்சி. சிந்தை - சிவனடிக்கு
இடமாக்கிய கருத்து, முந்தி - ஏனைய தவிர்த்தோர்க்கும் முன்னரே.
உலகு+ஆள்தல்=உலகாடல் - உலகை ஆளுதல்.
|