3280. பல்லி லோடுகை யேந்திப் பலிதிரிந்
  தெல்லி வந்திடு காட்டெரி யாடுவான்
செல்வ மல்கிய தென்றிரு வாரூரான்
அல்ல றீர்த்தெனை யஞ்சலெ னுங்கொலோ.     4

     4. பொ-ரை: இறைவர் பிரமனின் பல் இல்லாத
மண்டையோட்டை ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர். இரவில்
சுடுகாட்டில் நடனம் புரிபவர். செல்வச் செழிப்பு மிக்க அழகிய
திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என் துன்பத்தைத்
தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ!

     கு-ரை: பல் இல் ஓடு - பல்இல்லாத மண்டையோடு.