3287. |
வன்னி கொன்றை மதியொடு கூவிளம் |
|
சென்னி வைத்த பிரான்றிரு வாரூரை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்வாய்ப்
பன்னு பாடல்வல் லார்க்கில்லை பாவமே. 11 |
11.
பொ-ரை: வன்னி, கொன்றை, சந்திரன், வில்வம்
ஆகியவற்றைச் சடைமுடியில் திகழச் சூடிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் திருவாரூரை, நிலைபெற்ற சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தன் வாய்மலர்ந்து அருளிய இத்திருப்பாடல்களை ஓத
வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
கு-ரை:
ஓடு எண்ணுப் பொருளது. சென்னி - தலைமீது.
வாய் - திருவாயினால். பன்னு - சொல்லிய, வல்லார்க்குப் பாவம்
இல்லை.
|