3288. |
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே |
|
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 1 |
1.
பொ-ரை: முத்துப் போன்ற புன்னகை கொண்டு விளங்கும்
உமாதேவி அஞ்சுமாறு மதம் பிடித்த யானையின் தோலை உரித்துப்
போர்த்திய கடவுள் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம்
தலைவர். அவர் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
கு-ரை:
முத்து இலங்கும் - முத்தைப்போல் விளங்குகின்ற.
அழலும் அழல் - கடு நெருப்பு. வண்ணம் - நிறம். தன்மையுமாம்;
செழுநீர் புனற்கங்கை செஞ்சடைமேல் வைத்த தீ வண்ணனே.
|