3292. |
மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச் |
|
செய்ய
வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 5 |
5.
பொ-ரை: மயக்கமில்லாமல் மலர்கொய்து போற்றி
வணங்கும் அடியவர்கட்குச் செம்மையான உள்ளம் நல்கும்
செல்வத்தராகிய சிவபெருமான், தாழையும் முல்லையும் மணம்
கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்தருளும் எம் தலைவர் ஆவார்.
அவருடைய வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.
கு-ரை:
செய்ய - செவ்விதாகிய. கைதல் - தாழை.
|