3296. |
போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல் |
|
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே. 10 |
10.
பொ-ரை: மஞ்சட் காவி ஆடையால் போர்த்த
உடம்பினர்களும், பொழுதெல்லாம் அலைபவர்களும் சொல்கின்ற
மொழிகளை உயர்வானவாகக் கொள்ள வேண்டா. மேகம் சூழ,
குளிர்ந்த முல்லை மணம் கமழும் திருக்கருகாவூரில் வீற்றிருந்
தருளும் எம் சிவனின் வண்ணம் நெருப்புப் போன்ற சிவந்த
வண்ணம்.
கு-ரை:
போர்த்த மெய்யினர் - சீவரவுடையால் மறைத்த
உடம்பினர். போது உழல்வார்கள் - பொழுதெல்லாம் அவைபவர்கள்.
கார்த்தண் முல்லை -கார்காலத்தில் மலரும் தண்ணிய முல்லைப்பூ. ஆத்தர் - ஆப்தர்.
|