3297. |
கலவ மஞ்ஞையுல வுங்கரு காவூர் |
|
நிலவு
பாட லுடையான்றன நீள்கழல்
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலவ லாரவர் தொல்வினை தீருமே. 11 |
11.
பொ-ரை: மயில், தோகை விரித்து ஆடுகின்ற
திருக்கருகாவூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர்
புகழ்ப் பாக்கள் கொண்டு போற்றி வழிபடப் பெற்றவர்.
அப்பெருமானுடைய திருவடிகளில் அன்பு செலுத்தி ஞானசம்பந்தன்
அருளிய இத்திருப் பதிகத்தை ஓத வல்லவர்களின் தொல்வினை
தீரும்.
கு-ரை:
கலவம் - கலாபம்; தோகை. நிலவு - விளங்குகின்ற;
கழல் குலவும் - திருவடிகளில் குலாவும்.
|