3301. |
ஓதி யோத்திறி யாவம ணாதரை |
|
வாதில்
வென்றழிக் கத்திரு வுள்ளமே
ஆதி யேதிரு வாலவா யண்ணலே
நீதி யாக நினைந்தருள் செய்திடே. 4 |
4.
பொ-ரை: வேதங்களை ஓதி உணரும் ஞானம்
அற்றவராகிய சமணர்களை வாதில் வெற்றி கொள்ளத் திருவுள்ளம்
யாது? ஆதி மூர்த்தியாய்த் திருஆலவாயில் வீற்றிருந்தருளும்
அண்ணலே! நடுநிலையிலிருந்து அருள் செய்வாயாக!
கு-ரை:
ஓதி - அறிவு, ஞானம். ஓத்து - வேதம், ஞானம்
தரக்கூடிய வேதம். நீதியா - நடுநிலையுடன், நினைந்து அருள்
செய்திடு. திருவுள்ளமே -திருவுள்ளமோ? ஏகாரம் வினாப்பொருட்டு.
|