3302. |
வைய மார்புக ழாயடி யார்தொழும் |
|
செய்கை
யார்திரு வாலவா யாய்செப்பாய்
கையி லுண்டுழ லுமமண் கையரைப்
பைய வாது செயத்திரு வுள்ளமே. 5 |
5.
பொ-ரை: உலகெங்கும் பரவிய புகழை உடையவனே!
அடியவர்கள் தொழுது போற்றும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும்
இறைவனே! கையில் உணவு வாங்கி உண்டு திரியும் அமணராகிய
கீழ்மக்களுடன் மெதுவாக நான் வாதம் புரிவதற்குத் திருவுள்ளம்
யாது? உரைத்தருள்வாயாக!
கு-ரை:
வையம் ஆர் - உலகமெங்கும் (பரவிய). புகழாய்
-புகழையுடையவனே. பைய - அவசரமின்றி.
|