3305. |
அரக்கன் தான்கிரி யேற்றவன் றன்முடிச் |
|
செருக்கி னைத்தவிர்த் தாய்திரு வாலவாய்ப்
பரக்கு
மாண்புடை யாயமண் பாவரைக்
கரக்க வாதுசெ யத்திரு வுள்ளமே. 8 |
8.
பொ-ரை: கயிலைமலையைப் பெயர்த்தவனாகிய
இராவணனின் முடிகளை நெரித்து, அவனது செருக்கினை
அழித்தவரே! திருவாலவாயில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே!
எங்கும் பரவிய புகழை உடையவரே! இறைவனை நினைந்து
வழிபடும் பேறு பெறாதவர்களான சமணர்களை அடக்குவதற்கு
அவர்களுடன் அடியேன் வாது செய்யத் தங்கள் திருவுள்ளம் யாது?
கு-ரை:
கிரியேற்றவனாகிய அரக்கன் என்க. முடிச்செருக்கு
- பத்துத்தலை உடையேன் என்னுஞ் செருக்கு. பரக்கும் - எல்லா
உலகினும் பரவிய. மாண்பு - பெருமை. பாவரை - பாவியரை; வாது
செய்யுமிடம். கரக்க - ஒளிக்க. ஒழியும் வண்ணம், இது இடைப்
பிறவரல்.
|