| 
         
          | 3313. | நல்வி னைப்பய னான்மறை யின்பொருள் |   
          |  | கல்வி 
            யாயக ருத்தனு ருத்திரன் செல்வன் மேய திருமழ பாடியைப்
 புல்கி யேத்து மதுபுக ழாகுமே.           5
 |  
       
	   
            5. 
        பொ-ரை: இறைவன் நல்வினையின் பயனாகியவன். நான்மறையின் பொருளாகியவன். கல்விப் பயனாகிய கருத்தன்.
 உருத்திரனாகத் திகழ்பவன். அச்செல்வன் வீற்றிருந்தருளும்
 திருமழபாடியைப் போற்றுங்கள். அது உமக்குப் புகழ் தரும்.
       கு-ரை: 
        புல் + கு + இ = புல்கி. கு, சாரியை. ஏத்தும் அது - துதித்தலாகிய அப்பணி.
 |