3314. |
நீடி னாருல குக்குயி ராய்நின்றான் |
|
ஆடி னானெரி
கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே. 6 |
6.
பொ-ரை: பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய்
விளங்குகின்றான். அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம்
ஆடுபவன். பத்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில்
இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு
வறுமை இல்லை.
கு-ரை:
நீடினார் உலகுக்கு - பரப்பான் மிக்க உலகத்திற்கு.
மலர் தலை உலகம் என்றபடி. எரி - எரியும். கான்இடை -
காட்டிடை. (மயானத்தில்) பாடின் ஆர் இசை - பாடுதலால்
உண்டாகிய இனிய இசைமிக்க (திருமழபாடி).
|