3319. மந்த முந்து பொழின்மழ பாடியுள்
  எந்தை சந்த மினிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுண் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.     11

     11. பொ-ரை: தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த
திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவ
பெருமானைச் சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி,
வாசனை வீசும் கடலுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன்
அருளிய இத்திருப்பதிக மாலையை ஓதவல்லவர்கட்குப் பாவம்
இல்லை.

     கு-ரை: மந்தம் - தென்றற்காற்று. சந்தம் - இசைப்பாடல்கள்