| 
         
          | 3326. | நரக மேழ்புக நாடின ராயினும் |   
          |  | உரைசெய் வாயின ராயி னுருத்திரர் விரவி யேபுகு வித்திடு மென்பரால்
 வரதன் நாமம் நமச்சி வாயவே.     7
 |        7. 
        பொ-ரை: எழ் நரகங்கட்குச் செல்லக் கூடிய பாவிகளானாலும் திரவைந்தெழுத்பை் பக்தியோடு
 உச்சரிப்பார்களேயானால், உருத்திர கணத்தாரோடு சேர்ந்து
 வசிக்கும் பேற்றினைப் பெறுவர். அடியவர்கள் கேட்ட வரமெல்லாம்
 தரும் சிவபெருமானின் திரு நாமமும் திருவைந்தெழுத்தே ஆகும்.
       கு-ரை: 
        வரதன் - கேட்ட வரம் அனைத்தும் தருவோன். உருத்திரர்... புகுவித்தாரும் என்ற கருத்து உருத்திர பல்
 கணத்தாருடன் கலந்து புகச் செய்யும். என்பர் - என்று
 மெய்ஞ்ஞானிகள் கூறுவர்.
 |