3337. |
கலவு சீவரத் தார்கையி லுண்பவர் |
|
குலவ மாட்டாக்
குழக னுறைவிடம்
சுலவு மாமதி லுஞ்சுதை மாடமும்
நிலவு தண்டலை நீணெறி காண்மினே. 10 |
10.
பொ-ரை: சீவரமென்னும் ஆடையைச் சுற்றிய
புத்தர்களும், கையில் உணவைக் கவளமாய் வாங்கி உண்ணும்
சமணர்களும் அன்பு செலுத்துவதற்கு எட்டாதவனாய் விளங்கும்
அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
வளைந்தமாமதில் களும், சுண்ணச் சாந்தினாலாகிய மாடங்களும்
விளங்குகின்ற திருத் தண்டலை நீள்நெறி ஆகும். அங்கு
வீற்றிருந்தருளும் பெருமானைத் தரிசித்து வழிபடுங்கள்.
கு-ரை:
கலவு - சுற்றிய, சீவரத்தார் - சீவரமென்னும்
ஆடையையுடையவர்; புத்தர். இவர்கள் கொண்டாடுதற் கெட்டாத.
குழகன் - அழகன். சுலவும் - வளைந்த. நிலவு - விளங்குகின்ற.
|