| 
         
          | 3338. | நீற்றர் தண்டலை நீணெறி நாதனைத் |   
          |  | தோற்று 
            மேன்மையர் தோணி புரத்திறை சாற்று ஞானசம் பந்தன் றமிழ்வலார்
 மாற்றில் செல்வர் மறப்பர் பிறப்பையே.      11
 |        11. 
        பொ-ரை: திருநீறு அணியப்பெற்ற அடியவர்கள் வாழும் திருத்தண்டலை நீணெறியில் வீற்றிருக்கும் நாதனை, அத்தகைய
 திருநீற்றின் மேன்மை விளங்கும் தோணிபுரத்தில் வீற்றிருந்தருளும்
 ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள்
 நிலைத்த செல்வத்தை உடையவர்களாய்ப் பிறவிப்பிணி நீங்கப்
 பெற்றவராவர்.
       கு-ரை: 
        நீற்றர் - திருநீறணிந்த அடியார்கள் வாழும் தண்டலை நீணெறி. தோற்றம் - (விளங்கித்) தோன்றுகின்ற. (மேன்மையர்)
 தோணிபுரம் என்பதற்கும் இவ்வாறே உரைக்க. மாற்றில் - மாறுதல்
 இல்லாத (செல்வர்) - வந்து அழிந்து மாறும் பிற செல்வங்கள் அல்ல.
 மாற்று - முதனிலை திரிந்த தொழிற்பெயர். மறப்பர் பிறப்பை -
 இனிப்பிறவார் என்பது கருத்து.
 |