| 
         
          | 3339. | செய்ய னேதிரு வாலவாய் மேவிய |   
          |  | ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய 
            ராமம ணர்கொளு வுஞ்சுடர்
 பைய வேசென்று பாண்டியற் காகவே.         1
 |        1. 
        பொ-ரை: நடுநிலைமை உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள்
 செய்வீராக. பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த
 இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
       கு-ரை: 
        செய்யனே - நடுநிலைமையை யுடையானே. ஒப்பநாடி அத்தக ஒறுத்தல் என்னும் குறிப்புப்போலும்.
 |