| 
         
          | 3342. | சிட்ட னேதிரு வாலவாய் மேவிய |   
          |  | அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள் துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
 பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே.     4
 |  
       
           4. 
        பொ-ரை: நீதிநெறி தவறாதவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அட்டமூர்த்தி வடிவானவரே! என்னை அஞ்சேல்
 என்று அருள்புரிவீராக! கொடியவரான அமணர் இம்மடத்தில் பற்ற
 வைத்த நெருப்பு கல்வியறிவுடையோனாகிய பாண்டிய மன்னனைச்
 சென்று பற்றுவதாக.
       கு-ரை: 
        சிட்டன் - நீதிமுறை வழுவாதவன். பட்டிமன் - கல்வியறிவு உடைய அரசன்.
 |