| 
         
          | 3344. | தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும் |   
          |  | அஞ்ச 
            லென்றரு ளாலவா யண்ணலே வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
 பஞ்ச வன்தென்னன் பாண்டியற்காகவே.     6
 |  
       
	   
       
             6. 
        பொ-ரை: திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே! அபயம் என்று உம்முடைய திருவடிகளைச் சரணம் அடைந்த
 அடியேனையும் அஞ்சேல் என்று கூறி அருள்புரிவீராக. வஞ்சகம்
 செய்யும் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த இந்த நெருப்பு,
 பஞ்சவன், தென்னன் முதலிய பெயர்களையுடைய பாண்டிய
 மன்னனைச் சென்று பற்றுவதாக.
       கு-ரை: 
        தஞ்சம் - (தண் + து + அம்) அபயம். அஞ்சல் - அஞ்சாதே. வஞ்சம் - (வல் + து + அம்) கொடுமை. பஞ்சவன்;
 தென்னவன்; பாண்டியனைக் குறித்த பெயர்கள்.
 |