| 
         
          | 3345. | செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய் |   
          |  | அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக் கங்கு லாரமண் கைய ரிடுங்கனல்
 பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே.     7
 |  
	   
       
            7. 
        பொ-ரை: சிவந்த கண்களையுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அழகிய
 கண்களையுடைய சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று
 அருள்செய்வீராக! இருள்மனம் கொண்ட சமணர்கள் இம்மடத்திற்கு
 இட்ட நெருப்பானது, உயிருக்குத் தீங்கு நேராதபடி பாண்டிய
 மன்னனைச் சென்று பற்றுவதாக.
       கு-ரை: 
        அங்கணன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர். அங்கணன் கையிலை காக்கும் (காஞ்சிப் புராணம்.) கங்குலார் -
 இருள் போன்றவர். மீளவும் சைவம் திரும்புகின்றமையின் பங்கம்
 இல் தென்னன் என்றார். (தி.12 பெரியபுராணம்) பங்கம் - குற்றம்.
 |