3346. தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய்
  ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற்காகவே.     8

     8. பொ-ரை: பிறன் மாதரை விரும்பிய தூர்த்தனாகிய
இராவணனின் வீரத்தை அழித்துப்பின் அருள்செய்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருங்கருணையுடைய சிவபெருமானே!
அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக! இறைவனைத்
துதிக்கும் பேறு பெறாத சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பு,
இப்பூவுலகை ஆளும் தென்னன் பாண்டியனைச் சென்று பற்றுவதாக!

     கு-ரை: பிறன் மாதரை விரும்பினமைபற்றி இராவணன்
தூர்த்தன் எனப்பட்டான். ஏத்து(தல்) - துதித்தல். இல்லா(த) அமணர்.
பார்த் திவன் - பூமியை ஆள்பவன்.