3347. |
தாவி னானயன் றானறி யாவகை |
|
மேவி னாய்திரு வாலவா யாயருள்
தூவி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற்காகவே. 9 |
9.
பொ-ரை: உலகத்தைத் தாவியளந்த திருமாலும், பிரமனும்
அறிய முடியாதவாறு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற திருஆலவாய்
இறைவனே! அடியேனுக்கு அருள் புரிவீராக! நீராடமையால்
தூய்மையற்ற சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட இந்நெருப்பு இதற்குக்
காரணமான பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக!
கு-ரை:
தாவினான் -உலகத்தைத் தாவி அளந்த திருமால்.
தூஇலா - நீராடமையால் தூய்மை இல்லாத அமணர். பாவினான்
- (அத்தீயைத் திருமடத்தில்) பற்றுவித்தவன்.
|