3348. |
எண்டி சைக்கெழி லாலவாய் மேவிய |
|
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே. 10 |
10.
பொ-ரை: எட்டுத் திசைகளிலும் எழில் பரவும்
திருஆலவாயில் வீற்றிருந்தருளும், அண்டங்களுக்கெல்லாம்
நாயகனான சிவபெருமானே! அடியேனை அஞ்சேல் என்று
அருள்புரிவீராக! சிறுமையுடைய சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட
நெருப்பானது தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனைச்
சென்று பற்றுவதாக.
கு-ரை:
அண்டன் - தேவன்.
|