3349. |
அப்ப னாலவா யாதி யருளினால் |
|
வெப்பம்
தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே. 11 |
11.
பொ-ரை: எனக்குத் தந்தையாக விளங்கும் திருஆலவாய்
ஆதிமூர்த்தியின் திருவருளால் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த
நெருப்பின் வெப்பமானது பாண்டிய மன்னனைப் பற்றுவதாக என்று
உலக நியதிக்கு ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்தருளிய
இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் குற்றமற்ற செல்வர்களாகத்
திகழ்வர்.
கு-ரை:
மேதினிக்கு ஒப்ப - உலகுக்கு ஒக்கும்படியாக
(உரைத்த பதிகம்.) முதற்பாடலில் செய்யனே என அழைத்தமையுங்
காண்க. பதிகக் குறிப்பு. ஒவ்வொரு பாட்டிலும் கடவுளை விளிப்பன
இங்கு உய்த்து உணரத்தக்கன. எனை அஞ்சல் என்று அருள்செய்,
தீ பாண்டியர்க்கு ஆக என இருவாக்கியங்களாகக் கொள்வது
பொருத்தம்.
|