3353.
|
முதிருநீர்ச்
சடைமுடி முதல்வன்நீ முழங்கழல் |
|
அதிரவீசி
யாடுவா யழகன்நீ புயங்கன்நீ
மதுரன்நீ மணாளன்நீ மதுரையால வாயிலாய்
சதுரன்நீ சதுர்முகன் காலமேந்து சம்புவே. 4 |
4.
பொ-ரை: மதுரை என வழங்கும் திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் இறைவனே! தூயகங்கையைச் சடைமுடியில்
தாங்கிய முதல்வன் நீ. சப்தத்துடன் எரியும் நெருப்பிடையே நின்று
நிலமதிர ஆடுபவன்நீ. அழகன் நீ. பாம்பை ஆபரணமாக
அணிந்தவன் நீ. வரம்பில் இன்பம் உடையவன் நீ. மணவாளன் நீ.
மதுரை எனப்படும் ஆலவாயில் வீற்றிருந்தருளுபவன் நீ.
சாமர்த்தியமுடையவன் நீ. பிரமகபாலமேந்திப் பலியேற்றுத் திரியும்
சிவபிரான் நீ.
கு-ரை:
புயங்கன் - பாம்பை அணிந்தவன். மதுரன் -
இனியவன். சதுரன் - சாமர்த்தியவான். சம்பு - சிவபிரான்.
|