3357. கறையிலங்கு கண்டனே கருத்திலாக் கருங்கடல்
  துறையிலங்கை மன்னனைத் தோளடர ஊன்றினாய்
மறையிலங்கு பாடலாய் மதுரையால வாயிலாய்
நிறையிலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே.     8

     8. பொ-ரை: விடக்கறை விளங்கும் கழுத்தை உடையவரே!
கரிய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனின் தோள்கள்
நொறுங்கும்படி திருக்கயிலைமலையில் காற்பெருவிரலை ஊன்றியவரே!
வேதங்களிலுள்ள பாடல்களால் போற்றப்படுபவரே! மதுரையிலுள்ள
திருஆலவாயில் வீற்றிருந்தருளுபவரே! மனத்தை ஒரு வழியே நிறுத்தி
உம்மை நினைப்பதே உய்தற்குரிய நியமமாகும்.

     கு-ரை: கறை - விஷத்தின் கறுப்பு. கருத்திலாமை மன்னனைச்
சார்வது. நிறை - (புலன்வழியோடாது) நிறுத்தல்.