3360. போயநீர் வளங்கொளும் பொருபுனற் புகலியான்
  பாயகேள்வி ஞானசம் பந்தன்நல்ல பண்பினால்
ஆயசொல்லின் மாலைகொண்டு ஆலவாயிலண்ணலைத்
தீயதீர எண்ணுவார்கள் சிந்தையாவர்                              தேவரே.       11

     11. பொ-ரை: நீர்வளம் தரும், ஒலிக்கின்ற ஆறு பாய்கின்ற
சீகாழியில் அவதரித்த பரந்த கேள்வி ஞானமுடைய ஞானசம்பந்தன்
இறைவனுடைய நற்பண்புகளைப் போற்றி அருளிய இச்சொல்
மாலையை ஓதித் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் இச்சிவ
பெருமானை வழிபடுபவர்கள் தீமைகள் நீங்கப்பெற்று நற்சிந்தை
யுடைய தேவர்களாவர்.

     கு-ரை: போய் - வந்து பாய்ந்த. நீர், பாய - பரந்த. தீய(வை)
- தீவினைகள். இனிப்போதல் என்பதற்கு நேர்மை என்னும் பொருள்
உண்மையால் பருவகாலத்திற் பெய்த நீர் எனினும் பொருந்தும்.