| 
         
          | 3364. | விண்ணினண்ணு புல்கிய வீரமாய |   
          |  | மால்விடைச் சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து
 கையினான்
 அண்ணல்கண்ணொர் மூன்றினா னானைக்காவு
 கைதொழ
 எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்று
 மில்லையே.                         4
 |       4. 
        பொ-ரை: வானில் நண்ணிச்சென்று முப்புரம் எரித்தபோது திருமால் இடபமாகத் தாங்கினான். இறைவன் திருவெண்ணீறு
 அணிந்தவன். சூலமேந்திய கையினன். மூன்று கண்களையுடைய
 மூர்த்தியான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
 திருவானைக்காவைக் கைதொழ எண்ணும் அன்பர்கட்குத் தீமை
 எதுவும் இல்லை.
       கு-ரை: 
        விண்ணின் நண்ணு - வான்வழியாக வருகின்ற. புல்கிய வீரம் ஆய - பொருந்திய வீரத்தையுடைய, மால்விடை.
 கைதொழ வல்லவர்க்கும் - (எண்ணும் வண்ணம்) தியானிக்குமாறு
 வல்லவர்க்கும் தீங்கு எதுவும் நேராது என்பது இப்பாடலின் இறுதிப்
 பகுதியின் பொருள்.
 |