3365. வெய்யபாவங் கைவிட வேண்டுவீர்க
       ளாண்டசீர்
மைகொள்கண்டன் வெய்யதீ மாலையாடு
     காதலான்
கொய்யவிண்ட நாண்மலர்க் கொன்றைதுன்று
     சென்னியெம்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு
     சேர்மினே.                     5

     5. பொ-ரை: கொடிய பாவமானது விலக வேண்டும் என்று
விரும்புகிற அன்பர்களே! தேவர்களைக் காத்து அருள்புரிந்த
நஞ்சுண்ட இருண்ட கண்டத்தினனும், வெப்ப மிகுந்த நெருப்பினை
ஏந்தி ஆடுகின்ற அன்புடையவனும், அன்றலர்ந்த கொன்றை
மலரைக் கொய்து தலையிலணிந்தவனுமான எம் தலைவனான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா
என்னும் திருத்தலத்தை அடைந்து வழிபடுவீர்களாக.

     கு-ரை: வெய்ய, தீ மாலையாடு காதலான் - தீயிற் காதலோடு
ஆடும் இயல்புடையவன். மாலை - இயல்பு (தொல் - சொல்).