3370. |
கையிலுண்ணுங் கையருங் கடுக்கள்தின் |
|
கழுக்களும்
மெய்யைப்போர்க்கும் பொய்யரும் வேதநெறியை
யறிகிலார்
தையல்பாக மாயினான் றழலதுருவத்
தானெங்கள்
ஐயன்மேய பொய்கைசூ ழானைக்காவு
சேர்மினே. 10 |
10.
பொ-ரை: கையில் உணவு வாங்கி உண்ணும் சமணரும்,
கடுக்காய்களைத் தின்னும் புத்தர்களும், மெய்ப்பொருளாம்
இறைவனை உணராது பொய்ப்பொருளாம் உலகியலைப் பற்றிப்
பேசுபவர்களாய் வேதநெறியை அறியாதவர்கள். எனவே
அவர்களைச் சாராது, உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டவரும், நெருப்புப் போன்ற சிவந்த திருமேனியை
உடையவருமான எங்கள் தலைவரான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் பொய்கை சூழ்ந்த திருவானைக்கா என்னும்
திருத்தலத்தை அடைந்து அவரை வழிபட்டு உய்யுங்கள்.
கு-ரை:
கடுக்கள் - கடுக்காய்கள். கழுக்கள் - கழுந்து
போல்வார். மெய்யைப்போர்க்கும் பொய்யர், உடம்பைப்
போர்வையாற் போர்ப்போர் எனவும், பொய்யை மெய்யாக
நடிப்போர் எனவும் பொருள்தரும். சிலேடை.
|