3377. |
ஆடும் மெனவும் மருஞ்கூற்ற முதைத்து வேதம் |
|
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே. 6 |
6.
பொ-ரை: இறைவன் திருநடனம் புரிவதும்,
மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும்,
வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா,
மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா, பிறப்பை அறுத்துப்
பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின், இவை
தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு
காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம். இறைவன்
உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன்
செயல்கட்குக் காரணம்.
கு-ரை:
ஆடும் எனவும் நாட்டல் ஆமே என்றது - ஆடுதல்,
கூற்றம் உதைத்தல், வேதம் பாடுதல், என்னும் இறைவன் செயலாகிய
இம் மூன்றும் புகழ்கருதியோ ஆன்மாக்களை உய்விக்கவேண்டியோ
என ஆராய்வீராகில் புகழலால் அவனுக்கு ஆவது என்னை?
துன்பம் அடைதலும் அதற்குக் காரணமான பிறப்பும் நீங்கி உயிர்கள்
உய்தி கூட வேண்டும் என்னும் நிர்ஹேதுக கிருபையன்றிப்
பிறிதென்? உயிர்களை உய்விக்கக் கருதியே இறைவன் இவை
செய்கிறான் என்றபடி.
|