3378.
|
கடிசேர்ந்த
போது மலரான கைக்கொண்டு நல்ல |
|
படிசேர்ந்த
பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு
மன்றே. 7 |
7.
பொ-ரை: சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப்
போற்றி, நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான
சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு
காலால் இடற, சிவ பூசைக்கு இடையூறு செய்த கால் மீது
அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச, அது மழுவாக மாறிக் காலை
வெட்டினாலும், முக்கண் மூர்த்தியான் சிவபெருமான்
அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு
சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ?
கு-ரை:
கடி ... ... அன்றே என்றது:- அரனடிக்கு அன்பர்
செய்யும் பாவமும் அறமதாகும், பரனடிக்கு அன்பிலார்செய்
புண்ணியம் பாவமாகும், வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி
தீமையாகி, நரரினில் பாலன்செய்த பாதகம் நன்மையாய்த்தே
(சித்தியார் - சுபக். 29)
|