3381. |
மாலா
யவனும் மறைவல்ல நான்மு கனும் |
|
பாலாய
தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே. 10 |
10.
பொ-ரை: திருமாலும், நான்மறைகளையும் நன்கு கற்ற
பிரமனும், பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண
விரும்பி, பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால
விடத்தை உண்டு, தேவர்களைக் காத்து அருள்செய்தவர்
சிவபெருமான்.
கு-ரை:
மாலாயவனும்...செய்ததாமே என்றது:- திருமால்
முதலிய தேவர்கள் இறந்தொழியாமைப் பொருட்டு இறைவன்
நஞ்சுண்டு காத்த கருணைத்திறம் கூறியபடி.
|