| 
         
          | 3384. | விரையார் கொன்றையினாய் விடமுண்ட |   
          |  | மிடற்றினனே உரையார் பல்புகழா யுமைநங்கையொர்
 பங்குடையாய்
 திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி
 யூருறையும்
 அரையா வுன்னையல்லா லடையாதென
 தாதரவே.                         1
 |  
             1. 
        பொ-ரை: நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால்
 பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு
 மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய
 கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே!
 உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது.
       கு-ரை: 
        விரை - வாசனை. உரைஆர் - (அடியவர்) பேச்சில் பொருந்திய. அரையா - அரசனே, ஆதரவு - புகலிடமாகக்
 கொள்வது; ஆசை எனினும் ஆம். அரசன் - அரையன் என வந்தது
 எழுத்துப் போலி.
 |