3386. |
கையார் வெண்மழுவா கனல்போற்றிரு |
|
மேனியனே
மையா ரொண்கணல்லா ளுமையாள்வளர்
மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி
யூருறையும்
ஐயா வுன்னையல்லா லடையாதென
தாதரவே. 3 |
3.
பொ-ரை: கையின்கண் பொருந்திய வெண்மையான
மழுவாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த
திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை
உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே!
வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய
திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது
அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது.
கு-ரை:
வளர் - தங்குகின்ற.
|