3387. |
பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய |
|
புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய
வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு
வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லா லடையாதென
தாதரவே. 4 |
4.
பொ-ரை: பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத்
தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல்
அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச்
செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம்
இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும்
அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும்
ஆதரவாக அடையாது.
கு-ரை:
புனல் - கங்கைநீர். புரிநூலொடு விடையேறிய
வேதியனே. வேதியன் என்பதற்கேற்ப, புரிநூல் அடை அடுத்தது.
அந்தணனாகி அறவிடையேறி வருவான் என்பது, தென்பால் -
தமிழ்நாடு. தமிழ் நாட்டிலுள்ளதாகிய, உலகமெங்கும் விளங்கும்
திருவான்மியூர் என்க.
|