| 
         
          | 3389. | நீதி நின்னையல்லா னெறியாதும் |   
          |  | நினைந்தறியேன் ஓதீ நான்மறைகள் மறையோன்றலை
 யொன்றினையும்
 சேதீ சேதமில்லாத் திருவான்மி
 யூருறையும்
 ஆதீ யுன்னையல்லா லடையாதென
 தாதரவே.                           6
 |  
             6. 
        பொ-ரை: நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை
 அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன்
 தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி
 வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும்
 ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும்
 ஆதரவாக அடையாது.
       கு-ரை: 
        நீதிவடிவாயுள்ளவனே, உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுவதற்குரிய முறை எதனையும்
 நினைந்தறியேன் என்பது முதலடிக்குப் பொருள். ஓதிநான்மறைகள்
 - நான்கு வேதங்களையும் ஓதினவனே, சேதீ - சேதித்தவனே,
 சேதித்தல் - வெட்டுதல், (நகத்தாற்கிள்ளினமை.) ஆதீ - முதல்வனே.
 |