3390. |
வானார் மாமதிசேர் சடையாய்வரை |
|
போலவரும்
கானா ரானையின்றோ லுரித்தாய்கறை
மாமிடற்றாய் தேனார்
சோலைகள்சூழ் திருவான்மி
யூருறையும்
ஆனா யுன்னையல்லா லடையாதென
தாதரவே. 7
|
7.
பொ-ரை: வானில் விளங்கும் சந்திரனைச் சடையில்
தரித்தவனே! மலைபோல வரும் பாட்டிலுள்ள யானையின் தோலை
உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன்
துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில்
இடபவாகனத்தில வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால்
என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.
கு-ரை:
கான் ஆர் ஆனை - காட்டிலுள்ள யானை, ஆனாய்
- இடபவாகனத்தை யுடையவனே. ஆன் - பொதுப்பெயர். இங்கக்
காளையை உணர்த்திற்று. பசுவேறும் எங்கள் பரமன் என்றதும்
காண்க. (தி.2.ப.85.பா.9.) தேன் - வண்டு.
|