3395. |
சடையினன் சாமவேதன் சரி கோவண |
|
வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ லுடை யான்மறை
பல்கலைநூல்
உடையவ னூனமில்லி யுட னாயுமை
நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம் பிர மாபுரம் பேணுமினே. 2 |
2.
பொ-ரை: இறைவன் சடைமுடியுடையவன். சாமவேதத்தில்
விருப்பமுடையவன். சரிந்த கோவண ஆடையை அணிந்தவன்.
மழுவாகிய படை உடையவன். பாயும் புலியின் தோலை உடையவன்.
வேதம் முதலான பல கலைநூல்களில் கூறப்படும் தலைவன்.
எத்தகைய குறைபாடும் இல்லாத அவன், உமாதேவியோடு விரும்பி
வீற்றிருந்தருளுமிடமான திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப்
போற்றி வழிபடுவீர்களாக!
கு-ரை:
சாமவேதன் - சிவனுக்கொரு பெயர். சங்கரன்
சாமவேதி என்ற அப்பர் திருவாக்கானும் அறிக. (திருநேரிசை)
மறைபல்கலை நூல் உடையவன் - வேதம் முதலிய பலகலை
நூல்களுக்கும் தலைவன். பெடை - பெண்பறவை, அன்னம் -
மயில் -குயில் இவற்றைக் குறிக்கும் - உருவகம்.
|