| 
         
          | 3396. | மாணியை நாடுகால னுயிர் மாய்தரச் |   
          |  | செற்றுக்காளி காணிய வாடல்கொண்டான் கலந் தூர்வழி
 சென்றுபிச்சை
 ஊணியல் பாகக்கொண்டங் குட னேயுமை
 நங்கையொடும்
 பேணிய கோயின்மன்னும் பிர மாபுரம்
 பேணுமினே.                         3
 |  
            3. 
        பொ-ரை: இறைவன் பிரமசாரியான மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனின் உயிரை மாய்த்தவன். காளிதேவி
 காணுமாறு திருநடனம் புரிந்தவன். பிரமகபாலத்தைக் கையிலேந்தி
 ஊர்தோறும் சென்று பிச்சையேற்று உண்ணுதலை இயல்பாகக்
 காண்டவன். அப்பெருமான் உமாதேவியோடு விரும்பி
 வீற்றிருந்தருளும் கோயிலாக நிலைபெற்றுள்ள திருப்பிரமாபுரம்
 என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுவீர்களாக.
       கு-ரை: 
        மாணி - பிரமசாரி, மார்க்கண்டர். செற்று - கொன்று. காணிய - காணும்படி. ஊர்வழி கலந்து என்க. ஊன் - உண்ணுதல்.
 |