3400. |
வேத மலிந்தவொலி விழ வின்னொலி |
|
வீணையொலி
கீத மலிந்துடனே கிள ரத்திகழ்
பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முக டேறவொண்
மால்வரையான்
பேதையொ டும்மிருந்தான் பிர மாபுரம்
பேணுமினே. 7 |
7.
பொ-ரை: வேதங்களை ஓதுகின்ற ஒலி, வீணையின்
இன்னொலி, கீதஒலி இவை ஒருசேர எழுந்த கடல்ஓசையை
அடக்குமாறு, வானத்தின் உச்சியை அடைவதாய் உள்ள, ஒளி
பொருந்திய பெரிய கயிலைமலையானாகிய சிவபெருமான்
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் திருப்பிரமாபுரம் என்னும்
திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
கு-ரை:
வேதஒலி முதலிய ஒலிகள் மிக, அவை. பௌவம் -
கடல் ஒலியையும். மறை - மறைக்கவல்ல, ஓதம் மலிந்து -
ஓசையாகப் பெருகி. வான்முகடு ஏற - ஆகாயத்தின் உச்சியை
அடைய, ஒள் பிரமாபுரம் - அழகாகிய பிரமாபுரம்.
மால்வரையான்பேதை - மலைமகள்.
|